

சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு நடைபெற இருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.


ஆயிரம் விளக்கு தொகுதியில் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு அத்தொகுதி மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர்.


இந்நிலையில் தனது மனைவிக்காக முதன்முறையாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார் நடிகரும் இயக்குநருமான சுந்தர்.சி


சுந்தர்.சி ஆயிரம் விளக்கு தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்டு வரும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளன.


குஷ்பு திமுக, காங்கிரஸ், பாஜக என தொடர்ந்து அரசியல் கட்சிகளில் இணைந்து பணியாற்றி வரும் நிலையில் சுந்தர். சி அரசியல் கட்சிகளில் தங்களை இணைத்துக் கொள்ளவில்லை.


முதன்முறையாக தனது மனைவி தொகுதி போட்டியிடும் தொகுதியில் அதிமுக பாஜக கூட்டணிக்கு ஆதரவாக சுந்தர்.சி பிரசாரம் மேற்கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.