லண்டனில் ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் எடுத்துக் கொண்ட படங்களை இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார் நடிகை சுஹாசினி மணிரத்னம். 80-களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை சுஹாசினி. மூத்த நடிகர் சாரு ஹாசனின் மகளான இவர் தயாரிப்பாளரும், இயக்குநரும் கூட. அதோடு உதிரிப்பூக்கள், காளி, ஜானி, நண்டு, மெட்டி, ராஜ பார்வை, மீண்டும் கோகிலா ஆகியப் படங்களில் துணை ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியிருக்கிறார். இந்நிலையில் தனது மகனின் அலுவலக திறப்பு விழாவுக்காக சமீபத்தில் லண்டன் சென்றிருந்தார் சுஹாசினி. அப்போது அங்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். அந்தப் படங்களை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார் சுஹாசினி.