நடிகை ஸ்ரீபிரியாவின் மகள் சினேகா - அன்மோல் ஷர்மாவின் திருமணம் நடைப்பெற்றது. 80-களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீ பிரியா. இவர் ரஜினிகாந்த் - கமல் ஹாசன் ஆகியோருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் 300 க்கும் அதிகமான திரைப் படங்களில் நடித்திருக்கிறார் ஸ்ரீபிரியா. ஸ்ரீ பிரியா நடித்த பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன. ஸ்ரீபிரியாவுக்கு 1988-ல் மலையாள நடிகர் ராஜ்குமார் சேதுபதி என்பவருடன் திருமணமானது. அவர்களுக்கு சினேகா, நாக அர்ஜுன் என ஒரு மகளும், மகனும் உள்ளனர். சினேகா சென்னையில் பிறந்தவர். இவர் லண்டனில் இருக்கும் பல்கலைக்கழகத்தில் இளநிலை மற்றும் முதுகலை சட்டப்படிப்பு படித்தார். தற்போது அவருக்கும் அன்மோல் ஷர்மா என்பவருக்கும் காதல் திருமணம் நடந்துள்ளது. இந்த திருமண விழாவில் 80-களில் முன்னணி நட்சத்திரங்களாக திகழ்ந்த பல பிரபலங்கள் கலந்துக் கொண்டனர், மூத்த நடிகர் சிவகுமார் ஸ்ரீபிரியாவின் மகள் சினேகா திருமணத்தில் கலந்துக் கொண்டார். 80-களில் திரையுலகை கலக்கிய நட்சத்திரங்களை ஒரே இடத்தில் பார்ப்பது ரசிகர்களுக்கு எப்போதும் மகிழ்ச்சியை தரும். அந்த வகையில் ஸ்ரீபிரியா வீட்டு திருமணத்தில் அவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் பார்த்ததில் ஆனந்தம் அடைந்துள்ளனர் ரசிகர்கள். நடிகைகள் மேனகா சுரேஷ், பூர்ணிமா பாக்யராஜ், சுஹாசினி, லிசி ஆகியோரும் இதில் கலந்துக் கொண்டனர். சரத்குமார் தனது மனைவி ராதிகாவுடன் கலந்துக் கொண்டார். நடிகை குஷ்புவும் ஸ்ரீபிரியா வீட்டு திருமணத்தில் கலந்துக் கொண்டனர். சினேகா - அன்மோல் சர்மா திருமணத்தில் உமா ரியாஸ், துருவ் விக்ரம். ஸ்ரீபிரியா வீட்டு திருமணத்தில் சினேகா - மனோபாலா ரம்யா கிருஷ்ணனுடன் சுரேஷ் சக்ரவர்த்தி