கே.ஜி.எப் 2 பட வெற்றிக்கு பிறகு நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2/ 9
நடிகர் யாஷ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2019-ல் வெளியான கே.ஜி.எஃப் படத்தின் முதல்பாகம் இந்திய அளவில் பிரமாண்ட வரவேற்பை பெற்றது.
3/ 9
இதன் அடுத்த பாகம், கடந்த 2020-ல் வெளியாக வேண்டியிருந்த நிலையில் கொரோனா காரணமாக வெளியீடு தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி உலகம் முழுவதும் 10,000 அதிகமான ஸ்க்ரீன்களில் வெளியாகியது.
4/ 9
கே.ஜி.எஃப் 2 படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
5/ 9
இந்த படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள், மாஸ் டயலாக் ஆகியவை தான் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.
6/ 9
சிறிய திரையுலகமான கன்னடத்திலிருந்து வெளியான ஒரு படம் மற்ற திரையுலகிலிருந்து வெளியான படங்களை ஆதிக்கம் செலுத்தி வருவது, அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
7/ 9
மேலும், இதுவரை உலகளவில் 1,200 கோடி ரூபாயை கடந்து வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது கே.ஜி.எப் 2.
8/ 9
இதனை தொடர்ந்து இப்படத்தின் வெற்றியின் காரணமாக, இயக்குனர், ஹீரோ என இருவரும் தங்களது சம்பளத்தை உயர்த்தியுள்ளனர்.
9/ 9
இவர்களை தொடர்ந்து தற்போது நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, ரூ. 2 கோடியாக தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.