குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி காதல் வைரஸ், தித்திக்குதே, தேவதையை கண்டேன் போன்ற படங்களில் நடித்தவர் ஸ்ரீதேவி. மஞ்சுளா - விஜயகுமார் தம்பதியின் கடைசி மகளான இவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகினார். ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு 6 வயதில் ரூபிகா என்ற மகள் உள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ரூபிகாவின் பிறந்த நாளை ஸ்ரீதேவி வித்தியாசமாக கொண்டாடி அந்த புகைப்படத்தை இணையத்தில் ஷேர் செய்வார். அந்த வகையில் ரூபிகாவின் 6 வது பிறந்த நாளை சுவிட்சர்லாந்தில் கொண்டாடி இருக்கிறார் . இந்த புகைப்படங்களை ஸ்ரீதேவி தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்து இருக்கிறார். இதற்கு ஸ்ரீதேவின் அக்காக்கள், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் ரிப்ளை செய்து ரூபிகாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.