அடுத்தடுத்து 2 படங்களில் ஒப்பந்தமாகியுள்ள நடியன்தாரா மீண்டும் பிஸியான நடிகையாக மாறியுள்ளார். நீண்ட நாள் காதலர் விக்னேஷ் சிவனுக்கும் – நயன்தாராவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் முடிந்தது. இந்த தம்பதியினர் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகியுள்ளனர். தற்போது இந்தியில் ஷாரூக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் முக்கிய கேரக்டரில் நயன்தாரா இடம்பெற்றுள்ளார். ஜெயம் ரவி நடிப்பில் இயக்குனர் அகமது இயக்கி வரும் இறைவன் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் நயன்தாரா. திருச்சிற்றம்பலம் படத்தை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் புதிய படத்தில் நயன்தாரா நடிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதேபோன்று தனியொருவன் படத்தின் 2ஆவது பாகத்திலும் நயன்தாரா இடம்பெறுகிறார். தொடர்ந்து படத்தில் ஒப்பந்தமாகி வரும் நயன்தாரா பிஸியான நடிகையாக மாறியுள்ளார். சமீபத்தில் நயன்தாரா நடிபபில் வெளிவந்த படங்களில் காத்துவாக்குல 2 காதல் படம் மட்டுமே வரவேற்பை பெற்றது. ஓ2, கனெக்ட், கோல்டு, காட் பாதர் படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.