5. சமந்தா (தெலுங்கு, தமிழ்): சமந்தா நடிப்பில் இந்த வருடம் தமிழ்ப் படம் காத்து வாக்குல ரெண்டு காதலும், தெலுங்குப் படம் யசோதாவும் வெளியாகின. இரண்டுமே சுமார்தான். அதைவிட 2021 டிசம்பர் இறுதியில் வெளியான புஷ்பாவில் இடம்பெற்ற, ஊ சொல்றியா மாமா பாடலுக்கு சமந்தாவின் ஆட்டம் இந்த வருடத்திலும் சூடு குறையாமல் உள்ளது.
1. தனுஷ் (தமிழ்): தனுஷின் முதல் ஹாலிவுட் படம் தி க்ரே மேன் வெளியாகி அவரை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தியது. மாறன் காலைவாரினாலும் திருச்சிற்றம்பலம் ஓடி பாக்ஸ் ஆபிஸில் ஜெயித்தது. நானே வருவேன் பெயர் வாங்கித் தந்தது. வருடம் முழுக்க தனுஷைப் பற்றி செய்திகள் வந்து கொண்டிருந்ததால் முதலிடத்தை அவருக்கு தந்திருக்கிறார்கள்.