முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ’ஏ’ சான்றிதழ் படத்தில் நடித்த சிவகுமார் - சுவாரஸ்ய தகவல்!

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ’ஏ’ சான்றிதழ் படத்தில் நடித்த சிவகுமார் - சுவாரஸ்ய தகவல்!

சிவகுமார் அப்போது ஆக்ஷன் ஹீரோ அல்ல. எப்போதும் போல் மென்மையான நாயகன். அவரை ஆக்ஷன்பட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் நாயகனாகப் போட்டு படம் எடுக்கிறாரே என்று அனைவருக்கும் ஆச்சரியம்.

 • 110

  எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ’ஏ’ சான்றிதழ் படத்தில் நடித்த சிவகுமார் - சுவாரஸ்ய தகவல்!

  1978 இல் முதல் படத்தை இயக்கிய எஸ்.ஏ.சந்திரசேகர் இரண்டு வருடப் போராட்டங்களுக்குப் பின் விஜயகாந்தை ஹீரோவாக்கி சட்டம் ஒரு இருட்டறை படத்தை எடுத்தார். படம் மாபெரும் வெற்றி பெற்றதுடன் அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. சட்டம்தான் நமது துருப்புச்சீட்டு என்பதை அறிந்து கொண்டவர், சட்டத்தை மையப்படுத்திய படங்களாக எடுத்தார்.

  MORE
  GALLERIES

 • 210

  எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ’ஏ’ சான்றிதழ் படத்தில் நடித்த சிவகுமார் - சுவாரஸ்ய தகவல்!

  1981 முதல் 1985 வரை ஐந்து வருட இடைவெளியில் இவர் இயக்கிய, ரீமேக் செய்த, டப்பிங் செய்யப்பட்ட படங்களின் எண்ணிக்கை 20 க்கும் மேல். வருடத்துக்கு ஐந்து படம் என்று இரவுப்பகலாக இயங்கிக் கொண்டிருந்தவர் 1985 இல் சிவகுமாரை வைத்து புதுயுகம் படத்தை எழுதி இயக்கினார்.

  MORE
  GALLERIES

 • 310

  எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ’ஏ’ சான்றிதழ் படத்தில் நடித்த சிவகுமார் - சுவாரஸ்ய தகவல்!

  சிவகுமார் அப்போது ஆக்ஷன் ஹீரோ அல்ல. எப்போதும் போல் மென்மையான நாயகன். அவரை ஆக்ஷன்பட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் நாயகனாகப் போட்டு படம் எடுக்கிறாரே என்று அனைவருக்கும் ஆச்சரியம். இது அவருக்கும் இருந்திருக்கும் போல. விஜயகாந்துக்கு படத்தில் ஒரு முக்கியமான வேடம் தந்து, தானும் ஒரு வேடத்தில் நடித்தார்.

  MORE
  GALLERIES

 • 410

  எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ’ஏ’ சான்றிதழ் படத்தில் நடித்த சிவகுமார் - சுவாரஸ்ய தகவல்!

  புதுயுகத்தில் சிவகுமார் லயன் ராஜசேகர் என்ற வழக்குரைஞராக வருவார். இவரது மாமாதான் இவரை வளர்த்தது. அவரது மகள் விஜியையே சிவகுமார் திருமணம் செய்து கொள்வார். சிகுமாருக்கும் தாதா சங்கிலி முருகனுக்கும் தகராறு இருக்கும். அது முதல் எபிசோட். அதற்கடுத்து கதை சிவகுமாரின் பிளாஷ்பேக்கிற்கு செல்லும். அதில் விஜயகாந்த் அவரது உயிர் நண்பன். சிவகுமாரின் காசில் விஜயகாந்த் இருப்பதாக பிறர் பேச, விஜயகாந்த் சிவகுமாரைவிட்டு பிரிந்து செல்வார். அவர்  என்னவானார் என்பது யாருக்கும் தெரியாது.

  MORE
  GALLERIES

 • 510

  எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ’ஏ’ சான்றிதழ் படத்தில் நடித்த சிவகுமார் - சுவாரஸ்ய தகவல்!

  இந்நிலையில் பண்டரிபாய் தனது மகனை காப்பாற்ற ஒரு நல்ல வழக்குரைஞராகத் தேடி, கடைசியில் சிவகுமாரிடம் வருவார். பண்டரிபாயின் மகன் யார் என்று பார்த்தால் விஜயகாந்த். தங்கக் கடத்தல், இரண்டு போலீஸ்காரர்களை கொலை செய்தது என பாக்கெட் நிறைய கேஸுடன் லாக்கப்பில் இருப்பார் விஜயகாந்த். அவரை இந்த நிலைக்கு ஆளாக்கியவர் ஹோட்டலில் நடனமாடும் அனுராதா. அவரைத் தேடி சிவகுமார் செல்ல, அனுராதாவை யாரோ கொலை செய்து விடுவார்கள். அந்தப்பழி சிவகுமார் மீது விழும்.

  MORE
  GALLERIES

 • 610

  எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ’ஏ’ சான்றிதழ் படத்தில் நடித்த சிவகுமார் - சுவாரஸ்ய தகவல்!

  இப்படி கொலை, கொலைப்பழி என்று ரங்கராட்டினமாக கதைச் சுற்றி கடைசியில் ஆரம்பத்தில் வந்த சங்கிலி முருகனிடம் வந்து முடியும். ஆரம்பத்தில் இரண்டு சண்டைக் காட்சியோடு விஜயகாந்தை இயக்குனர் சிறையில் அடைத்துவிட்டு கிளைமாக்ஸில்தான் திறந்துவிடுவார். அதனால் துப்பறிவது, டூயட் பாடுவது, விசாரணை மேற்கொள்வது என்று அனைத்தையும் இழுத்துப் போட்டு செய்து நாயகன் சீட்டை சிவகுமார் கைப்பற்றிவிடுவார். சண்டைக் காட்சியும் அவருக்கு உண்டு. லோ ஆங்கிள் ஷாட் வைத்து, கொங்கு நாட்டு சிங்கம்டா என்று கர்ஜிக்க செய்தும், ஆக்ஷன் ஹீரோ மேக்கப் சிவகுமாருக்கு கடைசிவரை பொருந்தவில்லை.

  MORE
  GALLERIES

 • 710

  எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ’ஏ’ சான்றிதழ் படத்தில் நடித்த சிவகுமார் - சுவாரஸ்ய தகவல்!

  தெற்கில் தொடங்கிய கதையூற்று திசையில்லாமல் வடக்கு, மேற்கு, கிழக்கு என்று சுழன்றடித்தது போதாமல், எஸ்.ஏ.சந்திரசேகர் போலீஸ் அதிகாரியாக வந்து அவர் பங்குக்கு சண்டையிட்டு கதையை கதம்பமாக்குவார். இந்த சிக்கல்கள் அனைத்தையும் கிளைமாக்ஸில் ஒரு பைட்டை வைத்து முடித்துக் கொள்ளலாம் என்ற அவரது தன்னம்பிக்கை பாராட்டுக்குரியது.

  MORE
  GALLERIES

 • 810

  எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ’ஏ’ சான்றிதழ் படத்தில் நடித்த சிவகுமார் - சுவாரஸ்ய தகவல்!

  கங்கை அமரனின் இசையில் பாடல்கள் எதுவும் ஹிட்டாகவில்லை. வில்லனின் ஆள்களாக வரும் கோமாளி டாக்டராக ஒய்.ஜி.மகேந்திரன், வழக்குரைஞராக வெண்ணிற ஆடை மூர்த்தி. இவர்களிடம் லூசு போல் பழகி உண்மையை கறக்கும் வேடத்தில் நமது தொலைக்காட்சி புகழ் வனிதா கிருஷ்ணசந்திரன் நடித்திருந்தார். விஜியின் அம்மாவாக கே.ஆர்.விஜயாவும் உண்டு.

  MORE
  GALLERIES

 • 910

  எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ’ஏ’ சான்றிதழ் படத்தில் நடித்த சிவகுமார் - சுவாரஸ்ய தகவல்!

  உருப்படியான கதை அமையாமல் பல கதைகளை உருட்டிச் சேர்த்து எடுத்த புதுயுகத்துக்கு சென்சார் 'ஏ' சான்றிதழ் வழங்கியது. மர்மயோகியில் ஆவி வருகிறது என்பதற்காக 'ஏ' சான்றிதழ் கொடுத்த சென்சார் இந்தப் படத்திற்கு ஏன் 'ஏ' சான்றிதழ் தந்தது என்று அலசிப் பார்த்தால், நமக்குக் கிடைக்கும் ஒரே காரணம் அனுராதா. படங்களுக்கு ஒரு பாடல்களுக்கு மட்டுமே ஆடிக்கொண்டிருந்தவரை இந்தப் படத்தில் சின்ன வேடத்தில் நடிக்க வைத்ததோடு விஜயகாந்த், சிவகுமார் இருவருடன் தலா ஒரு பாடலுக்கு ஆடவும் விட்டிருந்தார் இயக்குனர். இரண்டுமே படுகவர்ச்சியான நடனங்கள். விஜயகாந்துடன் ஆடுகிற போது மழை பெய்து, அனுராதாவின் வெள்ளையுடை நனைந்து... போட்றா 'ஏ' சான்றிதழ் என சென்சார் தீர்ப்பு வழங்கிவிட்டது.

  MORE
  GALLERIES

 • 1010

  எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ’ஏ’ சான்றிதழ் படத்தில் நடித்த சிவகுமார் - சுவாரஸ்ய தகவல்!

  படத்துக்கு மக்கள் அளித்தத் தீர்ப்பு... ரொம்ப சுமார். எப்படியெப்படியோ படம் எடுத்த எஸ்.ஏ.சந்திரசேகர் இப்படியும்கூட படமெடுத்திருக்கிறார் என்பதை அறிய புதுயுகத்தை யூடியூபில் பார்க்கலாம். 1985, பிப்ரவரி 22 இதே நாளில் வெளியான படம் இன்று 38 வது வருடத்தை நிறைவு செய்கிறது.

  MORE
  GALLERIES