டான் திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு திரையரங்கிற்கு வந்த சிவகார்த்திகேயன், ரசிகர்களுடம் படம் பார்த்தார். டாக்டர் படத்தைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டான். இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடித்துள்ளார். டான் படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் டிவி புகழ் சிவாங்கியும் டான் படத்தில் நடித்துள்ளார். படத்திற்கு இசை அனிருத் ரவிச்சந்தர். இதற்கிடையே ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த டான் திரைப்படம் இன்று பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. இதையடுத்து சென்னை வெற்றி திரையரங்கிற்கு வந்த சிவகார்த்திகேயன், அங்கு ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்தார்.