சின்னத்திரையில் 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் ‘முதல் டைட்டில் வின்னர்’ ஆனதில் தொடங்கியது இவரது பயணம். 2012ஆம் ஆண்டு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கிய 'மெரினா' திரைப்படத்தின் மூலம் நாயகனாக வெள்ளித்திரைக்குள் காலடி எடுத்து வைத்தார். அப்போது முதல் இவரின் சின்ன சின்ன குறும்புகளும், சுளுக்கி சிரிக்க வைக்கும் நகைச்சுவையும் மனம் கொத்தி பறவையாய் தமிழக திரை ரசிகர்களை கொத்திச் சென்றது.