சிவகார்த்திகேயன் – அதிதி ஷங்கர் நடிக்கும் மாவீரன் படத்தின் பூஜை நேற்று நடத்தப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. தேசிய விருதுபெற்ற இயக்குனர் மடோன்னே அஸ்வின் மாவீரன் படத்தை இயக்குகிறார். சிவகார்த்திகேயன் – அதிதி ஷங்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். நகைச்சுவை நடிகர் யோகி பாபு மாவீரன் படத்தில் இடம்பெற்றுள்ளார். மாவீரன் பட பூஜையில் இயக்குனர் ஷங்கர் கலந்து கொண்டார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஷாந்தி டாக்கீஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு பரத் சங்கர் இசையமைக்கிறார். விக்ரம் படத்திற்கு எடிட்டிங் செய்த பிலோமின் ராஜ், ஒளிப்பதிவாளர் விது அய்யன்னா உள்ளிட்டோர் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.