எழுபது மற்றும் எண்பதுகளில் வெளிவந்த 'பி' கிரேட் ஆக்ஷன் படங்களை அடியொற்றி எழுதப்பட்ட கதை. வில்லன்கள் குடும்பத்தை வேட்டையாட, அநாதையாகும் நாயகன் அவர்களை பழிவாங்குவான் அல்லவா. அதே நமத்துப்போன பட்டாசுதான் ஜல்லிக்கட்டு. நாயகன் பழிவாங்க வில்லன்களால் பாதிக்கப்பட்டவர் உதவி செய்வார். அந்த உதவி செய்யும் நபர் நாயகனை சிறையில் அடைத்த நீதிபதி என்ற ஜிகினா பேப்பர் ஜல்லிக்கட்டு ஒரேயடியாக நமத்துப்போகாமல் பாதுகாத்தது.
அந்தத் தனித்தீவுக்கு படகில் போகலாம். அதைவிட்டால் ஹெலிகாப்டரில்தான் போக முடியும். சத்யராஜ் அங்கிருந்து எப்படியாவது தப்பிக்க நினைப்பார். ஆனால், ஜட்ஜ் விடமாட்டார்.. ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையே ஒரு பந்தம் உருவாகும். தனது அண்ணனையும், குடும்பத்தையும் கொன்றவர்கள்தான் நீதிபதியின் பேத்தியையும் கற்பழித்து கொன்றவர்கள் என்பதை சத்யராஜ் அறிந்து கொள்வார். சிவாஜி போட்டுத் தரும் திட்டத்தின்படி வில்லன்கள் ஒவ்வொருவரையாக சத்யராஜ் தீர்த்துக் கட்ட, சத்யராஜுக்காக சிவாஜி வாதாடி விடுதலை பெற்றுத் தருவார்.
முழுப்படமும் எடுத்து, விநியோகஸ்தர்களிடம் அட்வான்சும் வாங்கிய பின் இப்படியொரு தடங்கல். தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனும் மற்றவர்களும் கலந்து பேசி, சத்யராஜும், சிவாஜியும் நீதிபதி முன்னால் சரணடைவது போல் ஒரு காட்சியை எடுத்து இறுதியில் இணைத்தனர். எப்படியோ, குற்றவாளிகள் சிறைக்குச் சென்றால் சரி என சென்சார் போர்டும் தணிக்கைச் சான்றிதழ் அளிக்க, படம் அறிவித்த தேதியில் திரைக்கு வந்தது.
மொத்த படத்தையும் அனுமதிக்க மாட்டோம் என்று சொன்ன சென்சாரை, வெறும் ஐம்பது வினாடி காட்சிகளை இணைத்து, சரிகட்டி சான்றிதழ் பெற்றது அசாதாரணமான நிகழ்வு. ஜல்லிக்கட்டில் இளையராஜா இசையில் அனைத்துப் பாடல்களையும் கங்கை அமரன் எழுதியிருந்தார். ஏரியில் ஒரு ஓடம்..., ஏய் ராஜா..., காதல் கிளியே காதல் கிளியே... ஆகிய பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றன.