தேவர் ஃபிலிம்ஸ் சான்டோ சின்னப்பதேவரும் (சுருக்கமாக தேவர்) எம்ஜிஆரும் எத்தனை நெருக்கமானவர்கள் என்பது திரையுலகம் அறிந்த செய்தி. தேவர் எம்ஜிஆரை நேரில் முருகா என்றுதான் அழைப்பார். அவர் இல்லாத நேரங்களில் எம்ஜிஆரை குறிப்பிட வேண்டுமென்றால் தெய்வம் என்றுதான் சொல்வார். அந்தளவு எம்ஜிஆர் மீது அவருக்கு மரியாதை. அதே போல் எம்ஜிஆருக்கும் தேவர் மீது பக்தி உண்டு.
இந்நிலையில், 1980-ல் சிவாஜியை வைத்து எம்.ஏ.திருமுகம் முதல்முறையாக தர்ம ராஜா படத்தை இயக்கினார். படத்தில் சிவாஜியின் பெயர் தர்ம ராஜா. கோவில் யானை ராமுவை இவர் தான் பார்த்துக் கொள்வார். வில்லன் பாலாஜி இவரது தங்கையை கற்பழித்துவிட்டு, அம்மன் சிலையையும் திருடிச் செல்வார். சிவாஜி அவரை தேடிக் கண்டுபிடித்து தங்கைக்கு திருமணம் செய்து வைப்பார். என்னடா கதை அதுக்குள்ள முடியுது என நினைக்கையில், கல்யாண நாளிலேயே மனைவியை கொன்றுவிட்டு பாலாஜி தப்பிவிடுவார். இதுவரை ஒரே காஸ்ட்யூமில், பேபி ஷாலினி கிராப் கட்டிங் ஹேர் ஸ்டைலுடன் கிராமத்தானாக சிவாஜி வருவார்.