இதில் சிவாஜி பணக்கார வீட்டுப்பிள்ளை. எந்த பொறுப்பும் இல்லாமல் ஊர் சுற்றுகிற அவரது உற்றத் தோழன் சந்திரபாபு. மகனின் போக்குப் பிடிக்காமல் சிவாஜியை அவரது தந்தை சென்னையில் இருக்கும் தனது நண்பர் நாகேஸ்வரராவின் வீட்டிற்கு அனுப்பி வைப்பார். சிவாஜி தனக்குப் பதில் சந்திரபாபுவை நாகேஸ்வரராவின் வீட்டிற்கு அனுப்பி வைப்பார். அதேநேரம், பேருந்தில் மாலினியை அவர் சந்திப்பார். முதல் பார்வையிலேயே மாலினியை சிவாஜிக்கு பிடித்துப்போகும். லோக்கல் பிராடான குலதெய்வம் ராஜகோபல் மூலம் மாலினி இருக்கும் குப்பத்துக்கே வருவார். மாலினி சொல் பேச்சு கேட்டு வேலைக்கு செல்லவும் ஆரம்பிப்பார்.
சிவாஜியின் தந்தை நாகேஸ்வரராவின் வீட்டிற்கு சிவாஜியை அனுப்பியது, அவரது மகள் சரோஜாதேவியை திருமணம் செய்ய. சரோஜாதேவி சந்திரபாபுதான் சிவாஜி என நினைத்து அவரை காதலிப்பார். நடுவில் ரிக்ஷா ஓட்டுகிற இன்னொரு சந்திரபாபு கதைக்குள் வர, ஏற்கனவே இருந்த ஆள் மாறhட்டம் இன்னும் சிக்கலாகும். ஒரு கொலை வழக்கில் சிவாஜி மாட்டிக் கொள்ள, இறுதியில் உண்மையும், உண்மையான குற்றவாளியும் யார் என்பது தெரியவர, சிவாஜி மாலினியுடனும், சரோஜாதேவி சந்திரபாபுடனும் இணைவார்கள்.
சிவாஜி இதில் இயல்பான நடிப்பில் அட்டகாசம் செய்திருப்பார். தன்னிடம் வழிப்பறி செய்யவரும் குலதெய்வம் ராஜகோபாலை அவர் ஓட்டுகிறவிதமும், அசந்தர்ப்பமாக நாடக நடிகனாகி மேடையில் நடித்துக் கொண்டிருக்கையில், அப்பாவைப் பார்த்ததும் நடுங்கியபடி ஓடி ஒளிவதும், மாலினியுடம் காதலில் வழிவதுமாக தனி ராஜாங்கமே நடத்தியிருப்பார். ரிக்ஷாக்கார சந்திரபாபு வந்த பிறகு படத்தில் அவரது கையே ஓங்கியிருக்கும். சென்னை பாஷையில் அவரது வசனம் ஒவ்வொன்றும் சரவெடி. இந்தப் படத்திற்கு சிவாஜியைவிட ஒரு ரூபாய் அதிக சம்பளம் சந்திரபாபுக்கு தரப்பட்டதாக சொல்வதுண்டு. படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான பி.ஆர்.பந்துலு, நாயகி மாலினியின் கண் தெரியாத தந்தையாக சில காட்சிகளில் நடித்திருந்தார்.
சித்திரம் பேசுதடி
உன் சித்திரம் பேசுதடி
எந்தன் சிந்தை மயங்குதடி
சித்திரம் பேசுதடி
எந்தன் சிந்தை மயங்குதடி
சித்திரம் பேசுதடி
சித்திரம் பேசுதடி
முத்துச் சரங்களைப் போல்
முத்துச் சரங்களைப் போல்
மோகனப் புன்னகை மின்னுதடி
முத்துச் சரங்களைப் போல்
மோகனப் புன்னகை மின்னுதடி
சித்திரம் பேசுதடி
எந்தன் சிந்தை மயங்குதடி
சித்திரம் பேசுதடி
தாவும் கொடி மேலே
தாவும் கொடி மேலே
ஒளிர் தங்கக் குடம் போலே
தாவும் கொடி மேலே
ஒளிர் தங்கக் குடம் போலே
பாவை உன் பேரெழிலே
எந்தன் ஆவலைத் தூண்டுதடி
பாவை உன் பேரெழிலே
எந்தன் ஆவலைத் தூண்டுதடி
சித்திரம் பேசுதடி
எந்தன் சிந்தை மயங்குதடி
சித்திரம் பேசுதடி
என் மனம் நீ அறிவாய்
உந்தன் எண்ணமும் நான் அறிவேன்
என் மனம் நீ அறிவாய்
உந்தன் எண்ணமும் நான் அறிவேன்
இன்னமும் ஊமையைப் போல்
மௌனம் ஏனடி தேன் மொழியே
இன்னமும் ஊமையைப் போல்
மௌனம் ஏனடி தேன் மொழியே
சித்திரம் பேசுதடி
எந்தன் சிந்தை மயங்குதடி
சித்திரம் பேசுதடி
கார்த்தியின் அப்பா அவரது நண்பனின் மகளை மணக்கச் சொன்னதும் அவர் வீட்டைவிட்டு வெளியேற ஒரு காரணமாக இருக்கும். கவுண்டமணியிடம் பணத்தைப் பறிகொடுக்கும் கார்த்திக் பிறகு அவருடனே கூட்டணி வைத்துக் கொள்வார். சந்தர்ப்பவசத்தால் கவுண்டமணியை தனது நண்பனின் மகன் என்று மணிவண்ணன் தனது வீட்டிற்கு அழைத்து வருவார். அதே வீட்டில் கார்த்திக் கார் டிரைவராக வேலைக்கு சேர்வார்.