சூர்யா படத்தில் நடிகை மிருணல் தாகூர் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 42 ஆவது படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மிருணல் தாகூர் இடம்பெறுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சீதாராமம் படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை மிருணல் பெற்றிருந்தார். இந்தப்படத்தில் சீதா மஹாலக்ஷ்மி மற்றும் இளவரசி நூர்ஜஹான் என்ற இரண்டு கேரக்டர்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். துல்கர் சல்மான் மற்றும் மிருணல் தாகூர் இடையிலான காதல் காட்சிகள் ரசிக்கும்படி அமைந்திருந்தன. சீதாராமம் படத்தை தொடர்ந்து மிருணல் தாகூருக்கு பட வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஹிந்தி திரைப்படங்களில் இவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த நிலையில் சூர்யா நடிக்கும் 42 ஆவது படத்தில் மிருணல் தாகூர் இடம் பெறுவார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மிருணல் தாகூர் மிருணல் தாகூர்