தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி பாடகியாக திகழ்பவர் நடிகை ஸ்ரேயா கோஷல். இவரின் குரலுக்கு அடிமையாகாதவர்களே இல்லை எனும் அளவுக்கு, அவ்வளவு அழகான குரலுக்கு சொந்தக்காரராக திகழ்கிறார். இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு தனது நண்பரும் தொழிலதிபருமான ஷைலாதித்யா முகோபாத்யாயாவை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து பாடி வந்த ஸ்ரேயா, கடந்த மே மாதம் ஆண் குழந்தைக்கு தாயானார். தேவ்யான் எனப் பெயரிடப்பட்ட அந்தக் குழந்தை பிறந்து தற்போது 6 மாதங்களாகிறது. இதனை அழகான படங்களுடன் இன்ஸாகிராமில் அறிவித்திருக்கிறார் ஷ்ரேயா.