இளையராஜா இசையமைத்திருக்கும் விடுதலை படத்தில் பாடகி அனன்யா பட் ‘ஒன்னோட நடந்தா’ என்ற பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் இன்று வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அனன்யா பட்டுடன் இணைந்து நடிகர் தனுஷ் ஒன்னோட நடந்தா பாடலை பாடியுள்ளார். கே.ஜி.எஃப். முதல் பாகத்தில் அம்மா பாடலை பாடியவர்தான் இந்த அனன்யா பட் அம்மா பாடலைப் போன்று இளையராஜாவின் இசையில் விடுதலை படத்தின் பாடலும் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. கர்நாடகாவை சேர்ந்த அனன்யா தொலைக்காட்சி தொடர்களில் நடிகையாகவும் நடித்து வருகிறார். கே.ஜி.எஃப். 2 படத்தில் மெகபூபா, அகிலம் நீ ஆகிய 2 பாடலைகளையும் அனன்யா பாடியுள்ளார். விடுதலை படத்தில் பாடியதன் மூலம் நேரடியாக தமிழ் படத்தில் அறிமுகமாகியுள்ளார் அனன்யா. ஒன்னோட நடந்தா பாடல் சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்த படங்களில் இவர் பாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனன்யா பட்