மாநாடு படம் நவம்பர் 25-ம் தேதி திரைக்கு வருவதை முன்னிட்டு புரமோஷன் வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக படத்தின் புதிய ஸ்டில்களை வெளியிட்டுள்ளனர்.
2/ 10
மாநாடு படத்தை வெங்கட்பிரபு இயக்க சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். சிம்பு, கல்யாணி பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்.
3/ 10
டைம் லூப் திரைக்கதையில் மாநாடு உருவாகியிருக்கிறது. ஒரு நாளில் சிலர் மாட்டிக் கொண்டிருப்பதும், நடந்த நிகழ்வே மறுபடி மறுபடி நடப்பதுமே டைம் லூப்பின் அடிப்படை.
4/ 10
மாநாடு படத்தின் மற்றுமொரு சிறப்பு எஸ்.ஜே.சூர்யா. போலீஸ் அதிகாரியாக வரும் இவர் மாநாடு ட்ரெய்லரில், 'வந்தான் சுட்டான் போனான்... ரிப்பீட்டு' என்று சொல்லும் டயலாக் ரசிகர்களிடையே பிரபலமடைந்துள்ளது.
5/ 10
ரசிகர்களின் பல்ஸ் அறிந்த தயாரிப்பாளர் எஸ்.ஜே.சூர்யாவும், சிம்புவும் இருக்கும் புகைப்படத்தை நேற்று வெளியிட்டார்.
6/ 10
மாநாடு போலவே டைம் லூப் திரைக்கதையில் அமைந்த படம் ஜாங்கோ. டைம் லூப் திரைக்கதையில் அமைந்த முதல் இந்தியப் படம் என்ற விளம்பரத்துடன் படத்தை நவம்பர் 19 வெளியிடுகின்றனர்.
7/ 10
மாநாடு படத்துக்கு யுவன் இசையமைத்துள்ளார். அறிவு ஒரு பாடல் பாடியுள்ளார்.
8/ 10
கல்யாணி சிம்புடன் இணைந்து நடிக்கும் முதல் படம் இது. ஹீரோ படத்தில் தமிழில் அறிமுகமான அவர் புத்தம் புதுகாலை ஆந்தாலஜியில் நடித்திருந்தார். அதையும் சேர்த்து தமிழில் அவருக்கு இது மூன்றாவது படம்.
9/ 10
வெங்கட்பிரபு கடைசியாக இயக்கிய பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி, சென்னை 28 இரண்டாம் பாகம் என எதுவும் ஓடவில்லை. பார்ட்டி படம் வெளியாகவில்லை. ஒரு வெற்றி நிச்சயம் தேவை என்ற நிலையில் மாநாடு வெளியாகிறது.
10/ 10
அரசியல் பின்னணியில் மாநாடு படம் தயாராகியிருக்கிறது. கொரோனா இரண்டாம் அலைக்குப் பின் வெளியான டாக்டர் படத்தைப் போல் இதுவும் ரசிகர்களை திரையரங்குக்கு அழைத்து வருமா? நவம்பர் 25 தெரியும்.