தனது தந்தை டி.ராஜேந்தர் மூலம் கைக்குழந்தையாக சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சிலம்பரசனின் ரத்தத்திலும் மூச்சிலும் சினிமா கலந்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. நான்கு வயதில் "என் தங்கை கல்யாணி" படம் மூலம் சிறந்த குழந்தை நட்சத்திரமாக அறியப்பட்ட சிலம்பரசன் பதினெட்டு வயதில் "காதல் அழிவதில்லை" படம் மூலம் நாயகனாக பதவி உயர்வு பெற்றார்.
சிம்புவும் கௌதம் வாசுதேவ் மேனனும் முதல் தடவையாக இணைந்த "விண்ணைத் தாண்டி வருவாயா" சிம்புவின் வாழ்வில் ஓர் மைல்கல் திரைப்படம். அதுவரை இருந்த சிலம்பரசனின் மொத்த லுக்கைஅடுத்த ஆண்டே வெளியான "வானம்" திரைப்படத்தில் கேபிள் ராஜா எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த சிலம்பரசன், படத்தின் இறுதிக் காட்சிகளில் உள்ளார்ந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.
மணிரத்னம் இயக்கிய "செக்கச் சிவந்த வானம்" படத்தில் முக்கிய கதாப்பாத்திரம் ஏற்றிருந்த சிம்பு, மல்டி ஸ்டார் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அண்மையில் வெளியான "வாரிசு" படத்தின் ப்ரமோஷன் பாடலிலும் சிம்பு தோன்றினார். பல தடைகளையும் சோதனைகளையும் மாறி மாறி சந்தித்து வந்த சிம்புவிற்கு மற்றுமொரு சோதனையாக "மாநாடு" திரைப்படம் அமைந்தது. ஆனாலும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்து வெளியாகி, வசூல் வேட்டை நடத்தியது மாநாடு.
தொடர்ந்து கௌதம் மேனனுடன் மூன்றாவது முறையாக இணைந்து "வெந்து தணிந்தது காடு" படத்தில் டானாக காட்சியளித்து அசத்திய சிம்பு, தற்போது கிருஷ்ணா இயக்கத்தில் "பத்து தல" படத்தில் நடித்து வருகிறார். ரசிகர்களின் பலத்த எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இத்திரைப்படம் சிம்புவின் திரைவாழ்வில் மற்றுமொரு வெற்றிப் படமாக அமையுமா? என்பது ரசிகர்களின் கையில்.