பத்து தல படம் வருகிற 30 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. மஃப்டி கன்னட படத்தின் ரீமேக்கான இந்தப் படத்தை சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை படங்களின் இயக்குநர் ஒபேலி என்.கிருஷ்ணா இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.