இந்நிலையில் தனது காதல் குறித்து பேசியிருக்கும் ஸ்ருதி, “சினிமா நடிகையாக இருப்பதால், இதற்கு முன்பு சில விஷயங்களை வெளியில் சொல்லாமல் இருந்தேன். சில வருடங்களாக இருந்த நான், இப்போது சாந்தனு ஹசாரிகாவை உயிருக்குயிராக காதலிக்கிறேன். ஆங்கில நாவல்கள், பெயிண்டிங், கிராபிக்ஸ் போன்ற விஷயங்களில் எனது எண்ணமும், அவரது எண்ணமும் ஒரேமாதிரி இருந்ததால் ஒருவரை ஒருவர் விரும்பினோம்.