இதையடுத்து முன்னணி ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த ஸ்ரேயா, ”என் குழந்தைக்கு 9 மாதமாகிறது. நான் அவளை இனி மறைக்க முடியாது என்று நினைக்கிறேன். அவள் ஏற்கனவே நன்கு பயணித்த குழந்தை, உலகம் முழுவதும் சில பகுதிகளுக்கு சென்று வந்திருக்கிறாள். ஒரு குழந்தை, தாயைப் பெற்றெடுத்தைப் போல நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். ராதா எனது பெஸ்ட் ஃப்ரெண்ட்’ என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.