கடந்த சில தினங்களுக்கு முன்னர் கன்னட மொழியில் கப்ஜா என்ற படம் வெளியாகி உள்ளது. ஆர் சந்துரு இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் உபேந்திரா நடித்துள்ளார். அவருடன் இணைந்து ஸ்ரேயா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். இவர் சமீபத்தில், மும்பை அருகிலுள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்குச் சென்றுள்ளார். அங்கு கூண்டுக்குள் பறவைகளை அடைத்து வைத்துள்ளனர். அதை வீடியோ எடுத்துள்ள ஸ்ரேயா, பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதற்கு பலர் ஆதரவாகவும் விளக்கம் அளிக்கும் வகையிலும் பதில் அளித்து வந்தனர். ஒரு சிலர் , ‘அவை வெளிநாட்டுப் பறவைகள். இங்கு விடுவித்தால், உயிர் வாழாது' என்று தெரிவித்துள்ளனர். இதற்குப் பதிலளித்த ஸ்ரேயா, “பறவைகளை ஏன் வியாபாரமாக்க வேண்டும்? வேறு நாட்டுக்கு கொண்டு வந்து அதை ஏன் கூண்டில் அடைத்து வைக்க வேண்டும்? இதுபோன்ற வெளிநாட்டுப் பறவைகளை வாங்காமல் இருப்பதுதான் நல்லது என்பதை சுட்டிக்காட்ட முயன்றுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.