திரைக்குப் பின்னால் சிவாஜிக்காக வாசித்தவர்கள் இவர்கள்தான். இது அந்த வித்வான்களுக்கே சோதனையாக முடிந்தது. அவர்கள் கச்சேரி செய்கையில் தில்லானா மோகனாம்பாள் சிவாஜி மாதிரி வாசியுங்கள் என்று ரசிகர்கள் அவர்களிடம் கேட்கத் தொடங்கியதாக பொன்னுசாமி பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார். அந்தளவு நாதஸ்வர வித்வான்களின் உடல்மொழி இப்படித்தான் இருக்கும் என்பதை தனது நடிப்பில் கொண்டு வந்திருந்தார் சிவாஜி கணேசன்.
தமிழக அரசின் திரைப்பட விருதுகளில் சிறந்த திரைப்படத்துக்கான இரண்டாவது விருது, சிறந்த கதை (கொத்தமங்கலம் சுப்பு), சிறந்த நடிகை (பத்மினி), சிறந்த துணை நடிகர் (பாலையா), சிறந்த துணை நடிகை (மனோரமா) ஆகிய விருதுகளை வென்றது. அப்போதைய தமிழக முதல்வர் சி.என்.அண்ணாதுரை ரசிகர்களுடன் அமர்ந்து இந்தப் படத்தை கண்டு ரசித்தார்.