திருமால் பெருமை 1968 இல் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான திரைப்படம். நவராத்திரி, திருவிளையாடல், சரஸ்வதி சபதம், கந்தன் கருணை என்று வரிசையாக புராணப் படங்கள் எடுத்து, வெற்றிக்கொடி நாட்டிய ஏ.பி.நாகராஜன் கந்தன் கருணைக்குப் பிறகு மீண்டும் சிவாஜியை வைத்து திருமால் பெருமை என்ற புராணப் படத்தை எடுத்தார். படம் எதிர்பார்த்தது போல் வெற்றியடைந்தது.
இதுபோல் சிவாஜி, எம்ஜிஆர் படங்களும் அவர்களது காலகட்டத்தில் மறுவெளியீடு கண்டிருக்கின்றன. குறிப்பாக 1952 இல் வெளியாகி வெள்ளிவிழா கண்ட சிவாஜியின் பராசக்தி, 16 வருடங்கள் கழித்து 1968 இல் மறுபடியும் திரையிடப்பட்டு, அப்போதும் 100 நாள்கள் ஓடியது. அந்த மறுவெளியீட்டின் போது திரைக்கு வந்த படம்தான் திருமால் மகிமை.