ஷாருக்கானின் ‘பதான்’ திரைப்படம் இந்தியில் ரூ.432 கோடியை வசூலித்திருந்த ‘கேஜிஎஃப் 2’ பட வசூல் சாதனையை முறியடித்துள்ளது.
2/ 11
அடுத்ததாக ‘பாகுபலி 2’ வசூல் சாதனையை விரைவில் முறியடிக்கும் எனக் கூறப்படுகிறது.
3/ 11
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘பதான்’ திரைப்படத்தை ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ளார்.
4/ 11
யாஷ் ராஜ் தயாரிப்பு நிறுவனத்தின் 50-வது படமாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது. படத்தின் ட்ரெய்லரின் தமிழ் பதிப்பை நடிகர் விஜய் வெளியிட்டிருந்தார்.
5/ 11
இப்படத்தில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம், டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
6/ 11
பதான் திரைப்படம் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே உலகம் முழுவதும் கடந்த ஜனவரி 25ஆம் தேதி வெளியானது.
7/ 11
ஹிந்தியில் மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியிலும் இப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியிருந்தது.
8/ 11
4 ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கானின் படம் வெளியாகியுள்ள நிலையில், பதான் திரைப்படத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
9/ 11
முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.106 கோடி வசூல் அள்ளிய இந்தப் படம் அடுத்தடுத்த நாட்களிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
10/ 11
தற்போது படம் வெளியாகி 15 நாட்கள் ஆன நிலையில், இந்தியில் மட்டும் படம் ரூ.450 கோடி அளவில் வசூலித்துள்ளது.
11/ 11
இதன் மூலம் ‘கேஜிஎஃப் 2’ படத்தின் இந்தி வசூலை முறியடித்துள்ள ‘பதான்’, ‘பாகுபலி 2’ படத்தின் இந்தி வசூலான ரூ.510 கோடியை முறியடிக்கும் என தகவல் கணிக்கப்பட்டுள்ளது.
111
’கேஜிஎஃப்’ சாதனை முறியடிப்பு... ’பாகுபலி’ வசூலை நோக்கி முன்னேறும் ’பதான்’!