டாம் குரூஸ், ஜாக்கி சான் மற்றும் ஜார்ஜ் குளூனி போன்ற சக பிரபல நடிகர்களை பின்னுக்குத் தள்ளி, ஷாருக்கான் உலகின் முதல் எட்டு பணக்கார நடிகர்களின் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.பாலிவுட் நடிகர் ஷாருக்கான் முப்பது வருடங்களுக்கு மேலாக இந்தி திரைப்படத் துறையில் பணியாற்றி வருவதன் மூலம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றுள்ளார்.