பாலிவுட் திரையுலகிலும் இருந்தும் பதான் படத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பியது. தி காஷ்மீரி ஃபைல்ஸ் படத்தை இயக்கிய விவேக் அக்னிஹோத்ரி பதான் பாடலுக்கு எதிராக சிறுமி ஒருவர் பேசும் வீடியோவைப் பகிர்ந்து, இந்த வீடியோ பாலிவுட்டுக்கு எதிரானது. மதசார்பற்றவர்கள் இந்த வீடியோவை பார்க்காதீர்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் விவேக் அக்னிஹோத்ரியின் மகள் மல்லிகா அக்னிஹோத்ரி கடற்கரையில் பிகினி உடையில் இருக்கும் படங்களைப் ஷாருக்கான் ரசிகர்கள் பகிர்ந்து, ''உங்கள் மகளே காவி வண்ணத்தில் பிகனி உடை அணிந்திருக்கிறார். முதலில் அவரை கண்டியுங்கள். பின்னர் மற்றவர்களை கேள்வி கேட்கலாம்'' என கமெண்ட் செய்துவருகிறார்கள்.