இந்நிலையில் உடல் எடை இழப்பு பற்றி ட்விட்டரில் குஷ்பு பதிவிட்டுள்ளார். அதில் ’20 கிலோ குறைத்து அங்கிருந்து இங்கு வந்துள்ளேன். நான் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறேன். உங்களை கவனித்துக் கொள்ளுங்கள், நினைவில் கொள்ளுங்கள், ஆரோக்கியமே செல்வம். என் உடம்பு சரியில்லையா என்று கேட்பவர்களின் அக்கறைக்கு நன்றி.இதற்கு முன்பு நான் அவ்வளவு ஃபிட்டாக இருந்ததில்லை. நான் உங்களில் 10 பேரையாவது உடல் எடையை குறைத்து, ஃபிட்டாக இருக்க தூண்டினால், நான் வெற்றி பெற்றுள்ளேன் என்பது எனக்குத் தெரியும்' என்று பதிவிட்டுள்ளார்.