பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் ஆர்யாவின் மனைவியாக துஷாரா விஜயன் நடித்திருந்தார். அந்த படத்தில் துஷாரா விஜயன் மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் மிகவும் எதார்த்தமாக நடித்து அனைவரும் கவனத்தையும் ஈர்த்தார். துஷாரா விஜயன் மாடலிங் துறையை சேர்ந்தவர் என்பதால் அடிக்கடி போட்டோ ஷூட்களை பதிவிடுவார். துஷாரா விஜயனுக்கு வித்தியாசமாக எதையாதவது முயற்சி செய்வது என்றால் மிகவும் பிடிக்குமாம். இந்நிலையில் துஷாரா விஜயன் துபாயில் ஸ்கை டைவிங் செய்துள்ளார். அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். மேலும் புகைப்படத்துடன் ‘வானத்தில் உயரமாக பறக்கிறேன்’ என்ற கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார். நடிகை துஷாரா விஜயன் ( Image : Instagram @dushara_vijayan) நடிகை துஷாரா விஜயன் ( Image : Instagram @dushara_vijayan)