மணிரத்னம் இயக்கிய நாயகன் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சரண்யா பொன்வண்ணன்.
3/ 12
அதன் பின் கருத்தம்மா படத்தில் பொன்வண்ணனுக்கு மனைவியாக நடித்திருந்தார்.
4/ 12
அதன் பின் சரண்யாவும் பொன்வண்ணனும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர்.
5/ 12
இருவரும் பல குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
6/ 12
குறிப்பாக தமிழ் சினிமாவில் அம்மா என்றாலே அனைவரது நினைவுக்கும் முதலில் சரண்யா தான் வருவார்.
7/ 12
சரண்யா பொன்வண்ணன் தம்பதியின் மூத்த மகள் பிரியதர்ஷினி.
8/ 12
மருத்துவரான பிரியதர்ஷினிக்கும் விக்னேஷ் என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
9/ 12
இதையடுத்து நேற்று காலை அவர்களுக்கு திருமணம் நடந்தது. அதில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துக் கொண்டனர்.
10/ 12
பின்னர் நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
11/ 12
அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ, கனிமொழி எம்.பி, தமிழச்சி தங்க பாண்டியன் எம்.பி உள்ளிட்ட அரசியல் பிரபலங்களுடன் திரைப்பிரபலங்களும் கலந்துக் கொண்டனர்.
12/ 12
மணமக்களை வாழ்த்திய முதல்வர் பசுமை மரக்கன்று கூடை பரிசளித்தது குறிப்பிடத்தக்கது.