இதனையடுத்து ரசிகர்களுக்கு பதிலளித்த சமந்தா, விரைவில் குஷி படத்தில் நடிப்பேன். விஜய் தேவரகொண்டா ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். முழுமையான உடல் ஆரோக்கியத்துடனும் உனது பெரிய சிரிப்புடனும் நீ வரும் வரை நாங்கள் காத்திருப்போம் என அவருக்கு விஜய் தேவரகொண்டா பதிலளித்திருக்கிறார்.
இந்த நிலையில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களை இயக்கிய ருசோ பிரதர்ஸின் சிடாடல் (Citadel) என்ற வெப் சீரிஸ் அமேசான் பிரைமிற்காக தயாராகிவருகிறது. சர்வதேச அளவில் தயாராகும் இந்த வெப் சீரிஸில் பிரியங்கா சோப்ரா முதன்மை வேடத்தில் நடிக்கிறார். இதன் இந்திய வெர்சனில் சமந்தா நாயகியாக நடிக்கிறார்.