மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமப்பட்ட சமந்தா தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் துவங்கியிருக்கிறார். சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் இணைந்தார் சமந்தா. இதன் ஒரு பகுதியாக குணசேகர் இயக்கத்தில் சாகுந்தலம் படத்தில் சமந்தா நடித்திருக்கிறார். இந்தப் படம் வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தில் அல்லு அர்ஜுனின் மகள் ஆரா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் ஆராவுடன் நடித்த அனுபவம் குறித்து சமந்தா பகிர்ந்துகொண்டார். அவர் பேசியதாவது, ஆரா தனது திறமையால் எல்லோர் மனதையும் கவர்ந்தார். ஆரா ஆங்கிலத்தில் பேசாமல் தெலுங்கில் மட்டுமே பேசினார். பெரிய நடிகர்களை விட ஆரா மிக தெளிவாக தெலுங்கு பேசினார். மிகவும் புத்திக்கூர்மைமிக்கவள். இவர் சூப்பர் ஸ்டாராவதற்காகவே பிறந்தவர். இந்தப் படத்தில் அவர் குட்டி இளவரசியாக நடித்திருக்கிறார் என்று பேசினார்.