நடிகை சமந்தா கர்ப்பமாக இருப்பதைப் போன்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட அவர், கடந்த அக்டோபர் மாதம் அவரை விட்டு பிரிந்தார். பின்னர் ஆன்மிக சுற்றுலா சென்று மனதை அமைதிப்படுத்தினார். சிறிது இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார். நாக சைத்தன்யாவுடனான பிரிவுக்குப் பிறகு, புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி - நயன்தாராவுடன் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சமந்தா கர்ப்பமாக இருப்பதைப் போன்ற படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. ஆனால் கர்ப்பமாக இருப்பதைப் போல் அந்தப் படத்தை எடிட் செய்து வெளியிட்டிருப்பது தெரியவந்துள்ளது.