அவருக்குப் பதிலடி தரும் விதமாக சமந்தா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘காது மடலில் ஏன் ஒருவருக்கு அதிக முடி வளர்கிறது என்று கூகுளில் தேடினேன். டெஸ்டோஸ்டிரோன் என்ற ஹார்மோன் அதிகம் சுரப்பதால் என பதில் வந்தது’’ என குறிப்பிட்டுள்ளார். மேலும் ‘யாரை சொல்கிறேன் என்பது உங்களுக்கு புரியும்’ என்ற ஹேஸ்டேக்கையும் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் தயாரிப்பாளர் சிட்டி பாபுவுக்கு அவர் பதிலளித்துள்ளார்.
இதற்கு தற்போது சிட்டி பாபு யூடியூப் சேனல் ஒன்றுக்கு பதில் அளித்து உள்ளார். அதில் எனது பெயர் குறிப்பிடப்படாததால் சமந்தாவின் பெயரையும் குறிப்பிடவில்லை. என் காதில் உள்ள முடியைப் பற்றி பேசாமல், என் வார்த்தைகளில் உள்ள நேர்மையைப் பற்றி பேசினால் நன்றாக இருந்திருக்கும். நான் வாய் திறந்தால் சமந்தாவின் மானம் போய்விடும் என கூறி உள்ளார்.