

மாலத்தீவுக்குச் சென்றிருக்கும் சமந்தா அங்கு எடுக்கப்பட்ட தனது புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.


கடந்த ஆண்டு ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்திருந்த சமந்தா, மீண்டும் தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோரும் நடிக்கின்றனர்.


கொரோனா ஊரடங்கில் வீட்டில் தங்கியிருந்த சமந்தா, அரசு தளர்வுகள் அளித்து படப்பிடிப்பு தொடங்கியதும் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் சிறப்பு தொகுப்பாளராக கலந்து கொண்டார்.


தற்போது குடும்பத்துடன் மாலத்தீவுக்குச் சென்றிருக்கும் சமந்தா அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.


சமந்தாவின் இந்த புகைப்படத்தைப் பார்த்த பலரும் அவரது அழகைப் பார்த்து வியந்து கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.


முன்னதாக கடந்த அக்டோபர் 30-ம் தேதி திருமணம் செய்து கொண்ட கவுதம் கிச்லு - காஜல் அகர்வால் தம்பதி மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றிருந்தனர்.