மூன்றாவது இடத்தில் ஆர்ஆர்ஆர் உள்ளது. சென்ற வார இறுதியில் 9.5 மில்லியன் டாலர்களை இப்படம் வசூலித்துள்ளது. நமது ரூபாயில் 70 கோடிகளுக்கும் மேல். இப்படியொரு வசூலை இதற்குமுன் எந்த இந்தியப்படமும் பெற்றதில்லை. பாகுபலி 2 க்குப் பிறகு இந்தப் படம்தான் இப்படியொரு பிரமாண்ட வசூலை பெற்றுள்ளது. இது பாகுபலி 2 பட வசூலைவிட அதிகம்.
சென்றவார யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் தி லாஸ்ட் சிட்டி திரைப்படம் 31 மில்லியன் டாலர்கள் வசூலுடன் முதலிடத்தில் உள்ளது. ஆரன் நீ, ஆடம் நீ இணைந்து இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் சான்ட்ரா புல்லக், பிராட் பிட் நடித்துள்ளனர். வார இறுதியில் 9.5 மில்லியன் டாலர்களை வசூலித்து யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் புதிய சரித்திரத்தை எழுதியிருக்கிறது ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம்.