அரசியலில் ஆர்வம் கொண்ட ரோஜா 1999-ல் தெலுங்கு தேச கட்சியில் இணைந்தார். 2009-ல் அக்கட்சியை விட்டு விலகி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ரோஜா பின்னாளில் எம்.எல்.ஏ ஆனார். இரண்டாவது முறையாக நகரி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது ஆந்திராவின் சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக உள்ளார்.