தனது கணவர் ரோபோ ஷங்கர் மற்றும் மகள் இந்திரஜா இருவரும் நடனமாடும் ரீல்ஸ் வீடியோவை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார் பிரியங்கா ஷங்கர். மேடை நகைச்சுவை நிகழ்ச்சிகளின் மூலம் தன் வாழ்க்கையை தொடங்கி, சின்னத்திரை, வெள்ளித்திரை என படிப்படியாக முன்னேறியவர் ரோபோ ஷங்கர். விஜய் டிவி-யில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பார்வையாளர்கள் மத்தியில் பிரபலமானார். ரஜினிகாந்தின் படையப்பா படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக நடிக்கத் தொடங்கிய ரோபோ ஷங்கர், தற்போது வரை பல படங்களில் நடித்துள்ளார். தனுஷின் மாரி, விஷ்ணு விஷாலின் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் உள்ளிட்ட படங்களில் ரோபோ ஷங்கரின் காமெடி பாரட்டப்பட்டது. அதோடு விஜய் டிவி-யின் காமெடி நிகழ்ச்சிகளிலும் நடுவராக பங்கேற்றார். இதற்கிடையே சில தினங்கள் முன்பு ரோபோ ஷங்கரின் லேட்டஸ்ட் படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. காரணம் அதில் அவர் மிகவும் உடல் மெலிந்து காணப்பட்டார்.   View this post on Instagram   A post shared by PriyankaRoboSankar (@kpy8priyankasankar) அதைப் பார்த்த ரசிகர்கள் ரோபோ ஷங்கருக்கு ஏதேனும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதோ என இணையத்தில் கேள்வி எழுப்பினர். ஆனால் அவர் தான் நடித்து வரும் புதிய படத்துக்காகத்தான் எடையைக் குறைத்ததாக ரோபோவின் மனைவி பிரியங்கா பின்னர் தெரிவித்திருந்தார். தற்போது அவர் தனது கணவர் ரோபோ ஷங்கரும், மகள் இந்திரஜாவும் நடனமாடும் ரீல்ஸ் வீடியோவை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் தொப்பையுடன் ரோபோ ஷங்கர் இருப்பதைப் பார்த்தால், அது பழைய வீடியோவாக இருக்கலாம் எனத் தெரிகிறது. Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.