இந்த நிலையில் தனது மனைவியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்ஸ்டாகிராமில் 20 வருடங்களுக்கு முன் மனைவியுடன் எடுத்துக்கொண்ட படத்தை பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், 2003 முதல் 2030 வரை 20 வருடங்களாகிவிட்டது. நாம் இருவரும் பல தூரங்கள் கடந்துவந்தாலும் அதே பதின்வயதினராகவே இளமையோடு இன்னமும் இருக்கிறோம் என்பதை பெருமையாக சொல்கிறேன்.
என்னுடன் வாழ்க்கையை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி. என்னை விட்டு விலகாமல் இருந்ததற்கு நன்றி. எனக்கு 2வது, 3வது, 76வது, 473வது என தொடர்ச்சியாக வாய்ப்பளித்தமைக்கு நன்றி. என்னுடைய சிறந்த நண்பராக, பைத்தியக்காரத்தனமான காதலியாக, கண்டிப்பான மனைவியாக, சிறப்பான அம்மாவாக இருப்பதற்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.