முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » இந்தியா, சீனா போர் பின்னணியில் தயாரான இரத்தத் திலகம்!

இந்தியா, சீனா போர் பின்னணியில் தயாரான இரத்தத் திலகம்!

சீன போர் பின்னணியில் தேசபக்தி சாயலில் எடுக்கப்பட்ட இரத்தத் திலகம் 100 நாட்களை தொடவில்லை.

  • 110

    இந்தியா, சீனா போர் பின்னணியில் தயாரான இரத்தத் திலகம்!

    1962 இல் நடந்த இந்தியா - சீனா போரை மையப்படுத்தி 1963 இல் வெளியான படம், இரத்தத் திலகம். சிவாஜி கணேசன், சாவித்ரி நடித்தது. படத்தின் கதை, வசனம், பாடல்களை கண்ணதாசன் எழுதினார்.

    MORE
    GALLERIES

  • 210

    இந்தியா, சீனா போர் பின்னணியில் தயாரான இரத்தத் திலகம்!

    கல்லூரியில் படிக்கையில் சிவாஜியும், சாவித்ரியும் எலியும், பூனையும். சண்டைக் கோழிகள். ஒத்தெல்லா நாடக அரங்கேற்றம் இருவரையும் நெருக்கமாக்குகிறது.

    MORE
    GALLERIES

  • 310

    இந்தியா, சீனா போர் பின்னணியில் தயாரான இரத்தத் திலகம்!

    இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். இந்த நேரத்தில், சீனாவில் இருக்கும் தந்தைக்கு உடல்நலமில்லாததால் அங்கு செல்லும் சாவித்ரி, சீன டாக்டர் ஒருவரை மணக்க வேண்டியதாகிறது.

    MORE
    GALLERIES

  • 410

    இந்தியா, சீனா போர் பின்னணியில் தயாரான இரத்தத் திலகம்!

    இதனிடையில் இந்திய ராணுவத்தில் சேரும் சிவாஜி, சாவித்ரி வேறொருவரை மணந்தது அறிந்து கொலைவெறி கொள்கிறார். இந்த களேபரங்களுக்கு நடுவில், சாவித்ரி தாய் நாட்டுப் பாசத்தை மறக்காமல் சீனாவின் தகவல்களை இந்தியாவுக்குச் சொல்லும் உளவாளியாகிறார். இது அவரது உயிரை பலிவாங்குகிறது. இறுதியில் நாயகனும் தாய் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்கிறான்.

    MORE
    GALLERIES

  • 510

    இந்தியா, சீனா போர் பின்னணியில் தயாரான இரத்தத் திலகம்!

    எக்ஸ்ட்ரா சீரியசாக எடுக்கப்பட்ட படத்தில் நாகேஷ், மனோரமா காமெடிக் காட்சிகள் பெரும் ஆறுதல். போகாதே போகாதே என் கணவா... என்ற வீரபாண்டிய கட்டபொம்மன் பாடலை சமயோஜிதமாகப் பயன்படுத்தியது ரசிக்க வைக்கிற காட்சி.

    MORE
    GALLERIES

  • 610

    இந்தியா, சீனா போர் பின்னணியில் தயாரான இரத்தத் திலகம்!

    கே.வி.மகாதேன் இசையில் கண்ணதாசன் எழுதிய, ஒரு கோப்பையில் என் குடியிருப்பு..., பசுமை நிறைந்த நினைவுகளே பாடல்கள் சூப்பர் ஹிட்டாயின.  இதில் ஒரு கோப்பையிலே என் குடியிருப்புப் பாடல் காட்சியில் அதனை எழுதிய கண்ணதாசனே பாடி நடித்திருப்பார். பாடல் வரிகள் ஒவ்வொன்றும் அட்டகாசம்.

    MORE
    GALLERIES

  • 710

    இந்தியா, சீனா போர் பின்னணியில் தயாரான இரத்தத் திலகம்!

    ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோலமயில் என் துணையிருப்பு இசை பாடலிலே என் உயிர் துடிப்பு நான் பார்ப்பதெல்லாம் அழ்கின் சிரிப்பு ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு காவியத் தாயின் இளைய மகன் காதல் பெண்களின் பெருந்தலைவன் நான் காவியத் தாயின் இளைய மகன் காதல் பெண்களின் பெருந்தலைவன் பாமர ஜாதியில் தனி மனிதன் நான்படைப்பதனால் என் பேர் இறைவன்

    MORE
    GALLERIES

  • 810

    இந்தியா, சீனா போர் பின்னணியில் தயாரான இரத்தத் திலகம்!

    ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோலமயில் என் துணையிருப்பு இசை பாடலிலே என் உயிர் துடிப்பு நான் பார்ப்பதெல்லாம் அழ்கின் சிரிப்பு ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் - அவர் மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன் - நான் மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் - அவர் மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன் - நான் நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோலமயில் என் துணையிருப்பு இசை பாடலிலே என் உயிர் துடிப்பு நான் பார்ப்பதெல்லாம் அழ்கின் சிரிப்பு ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு....

    MORE
    GALLERIES

  • 910

  • 1010

    இந்தியா, சீனா போர் பின்னணியில் தயாரான இரத்தத் திலகம்!

    சீன போர் பின்னணியில் தேசபக்தி சாயலில் எடுக்கப்பட்ட இரத்தத் திலகம் 100 நாள்களை தொடவில்லை. சில திரையரங்குகளில் கஷ்டப்பட்டு 80 தினங்களைப் பூர்த்தி செய்தது. தேசபக்தியையும் நல்ல கதை, திரைக்கதையில் சொன்னால் மட்டுமே மக்கள் விரும்பிப் பார்ப்பார்கள் என்பதற்கு இன்றும் சாட்சியாக உள்ளது இரத்தத் திலகம்.

    MORE
    GALLERIES