ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » இது புதுசா இருக்கே! 'வாரிசு' பட அப்டேட்டை சொல்லி ரசிகர்களைக் குழப்பிய ராஷ்மிகா

இது புதுசா இருக்கே! 'வாரிசு' பட அப்டேட்டை சொல்லி ரசிகர்களைக் குழப்பிய ராஷ்மிகா

ஒரே நாளில் வெளியானால் இரண்டு படங்களின் வசூலும் பாதிக்கக்கூடும். மேலும் திரையரங்குகளில் மோதல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

 • 18

  இது புதுசா இருக்கே! 'வாரிசு' பட அப்டேட்டை சொல்லி ரசிகர்களைக் குழப்பிய ராஷ்மிகா

  கன்னடத்தில் கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, கீதா கோவிந்தம் என்ற வெற்றிப்படத்துடன் தெலுங்கில் கால் பதித்தார்.

  MORE
  GALLERIES

 • 28

  இது புதுசா இருக்கே! 'வாரிசு' பட அப்டேட்டை சொல்லி ரசிகர்களைக் குழப்பிய ராஷ்மிகா

  தொடர்ந்து மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்த சரிலேரு நீக்கெவரு படம் அவரை முன்னணி நாயகியாக்கியது. தமிழிலும் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார்.

  MORE
  GALLERIES

 • 38

  இது புதுசா இருக்கே! 'வாரிசு' பட அப்டேட்டை சொல்லி ரசிகர்களைக் குழப்பிய ராஷ்மிகா

  இந்த நிலையில் தான் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்த புஷ்பா தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பதிவுசெய்தது. இதனால் ராஷ்மிகா நேஷனல் கிரஷ் ஆனார். ஹிந்தியில் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்த 'குட் பை' சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

  MORE
  GALLERIES

 • 48

  இது புதுசா இருக்கே! 'வாரிசு' பட அப்டேட்டை சொல்லி ரசிகர்களைக் குழப்பிய ராஷ்மிகா

  மேலும் சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடியாக மிஷன் மஜ்னு, அர்ஜுன் ரெட்டி இயக்குநர் சந்தீப் வங்கா ரெட்டி இயக்கத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் போன்ற படங்களில் நடித்துவருகிறார். இந்த நிலையில் விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்திருக்கிறார்.

  MORE
  GALLERIES

 • 58

  இது புதுசா இருக்கே! 'வாரிசு' பட அப்டேட்டை சொல்லி ரசிகர்களைக் குழப்பிய ராஷ்மிகா

  சிறுவயதில் அப்பாவுடன் இணைந்து கில்லி படம் பார்த்ததிலிருந்து தான் விஜய் ரசிகை என வாரிசு இசை வெளியீட்டு விழாவில் ராஷ்மிகா பேசியிருந்தது ரசிகர்களைக் கவர்ந்தது. விஜய்யுடன் அவர் நடனமாடிய ரஞ்சிதமே பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

  MORE
  GALLERIES

 • 68

  இது புதுசா இருக்கே! 'வாரிசு' பட அப்டேட்டை சொல்லி ரசிகர்களைக் குழப்பிய ராஷ்மிகா

  இந்த நிலையில் புத்தாண்டை முன்னிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் ராஷ்மிகா.  அப்போது வாரிசு படம் குறித்து பேசிய அவர், வாரிசு படம் ஜனவரி 11 ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவித்திருந்தார்.

  MORE
  GALLERIES

 • 78

  இது புதுசா இருக்கே! 'வாரிசு' பட அப்டேட்டை சொல்லி ரசிகர்களைக் குழப்பிய ராஷ்மிகா

  வாரிசு படமும் துணிவு படமும் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியான நிலையில் ராஷ்மிகாவின் பதில் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 88

  இது புதுசா இருக்கே! 'வாரிசு' பட அப்டேட்டை சொல்லி ரசிகர்களைக் குழப்பிய ராஷ்மிகா

  இரண்டு படங்களும் அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியீட்டுத் தேதியை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியானால் இரண்டு படங்களின் வசூலும் பாதிக்கக்கூடும். மேலும் திரையரங்குகளில் மோதல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதன் காரணமாக அடுத்தடுத்த நாள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

  MORE
  GALLERIES