கன்னட திரையுலகில் அறிமுகமான நடிகை ராஷ்மிகா தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா அவரை இந்திய அளவில் முன்னணி கதநாயாகியாக உயர்த்தியது. விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்திருந்த வாரிசு திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. வாரிசு படத்தில் ராஷ்மிகா இரு பாடல்களுக்கு மட்டுமே நடனமாடி செல்வதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் சமீபத்தில் ராஷ்மிகா ஒரு பேட்டியில் வாரிசு படம் தொடர்பான விமர்சனத்திற்கு பதிலளித்தார். ராஷ்மிகா பேசியதாவது, வாரிசு படத்தில் இரண்டு பாடல்களைத் தவிர எனக்கு பெரிதாக நடிப்பதற்கு வாய்ப்பு இல்லை எனத் தெரிந்து தான் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டேன். விஜய் சாருடன் நடிக்க வேண்டும் என்பதற்காகவே இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். விஜய் சாரை நீண்ட காலமாக ரசித்துவந்திருக்கிறேன். ஒரு நடிகராக சக நடிகர்களிடம் ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும் என நினைப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.