ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கில் டாப் நடிகையாக இருக்கிறார். தமிழில் படம் நடிப்பதற்கு முன்பே ராஷ்மிகாவிற்கு ரசிகர்கள் கூடி விட்டனர். சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.
2/ 6
தற்போது விஜயுடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் மூலம் முதன்முறையாக நடிகர் விஜய்யுடன் நடித்துள்ளார். விஜய் ராஷ்மிகா இருக்கும் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலானது.
3/ 6
தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள வாரிசு படம் வருகிற 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. வெளியீட்டுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் படத்துக்கான டிக்கெட் முன்பதிவு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
4/ 6
துணிவும் அதே தினத்தில் வெளியாகும் நிலையில் இரண்டு படங்களுக்கும் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டுகளை வாங்க ரசிகர்கள் போட்டிபோட்டுவருகின்றனர். இதன் காரணமாக பெரும்பாலான திரையரங்குகளின் இணைய பக்கம் முடங்கியது.
5/ 6
வாரிசு படத்திலிருந்து ரஞ்சிதமே பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அந்த பாடலில் விஜய், ராஷ்மிகா இணைந்து நடனமாடியிருந்தனர்.
6/ 6
இந்நிலையில், இப்படத்தில் நடிக்க நடிகை ராஷ்மிகா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வாரிசு படத்துக்காக அவர் ரூ.4 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.