நான் நடிப்பதை விடவேண்டுமா? என்னதான் செய்யவேண்டும் என்று மனம் உடைந்து நடிகை ராஷ்மிகா பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
2/ 10
தெலுங்கில் முன்னனி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா தமிழில் கார்த்தியின் சுல்தான் படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானார்.
3/ 10
விஜய்யுடன் அவர் நீண்ட காலமாக நடிக்க வேண்டும் என்ற ஆசை ‘வாரிசு’ படத்தின் மூலம் நிறைவேறி உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான வாரிசு படமும் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப்படமாக அமைந்தது.
4/ 10
இதனை தொடர்ந்து சமீபத்தில் பாலிவுட்டில் இவரது நடிப்பில் மிஷன் மஞ்சு என்ற படமும் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
5/ 10
இப்படி ஒருபுறம் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் அவரைப் பற்றிய பல வதந்திகளும், பல விமர்சனங்களும் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன.
6/ 10
அடுத்தடுத்து ராஷ்மிகாவை டார்கெட் செய்யும் விதமாக ட்ரோல்கள் வெளியானது. இது குறித்து ரஷ்மிகா மனம் திறந்து தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
7/ 10
தனக்கு எதிராக வெறுப்பான கருத்துகளும், வதந்திகளும் தன்னை மிகவும் மன ரீதியாகப் புண்படுத்துவதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
8/ 10
நான் வொர்க்அவுட் செய்தால் ஆண் போல இருப்பதாக சொல்கிறார்கள், வொர்க்அவுட் செய்யாவிட்டால் குண்டாக இருப்பதாக சொல்கிறார்கள்.
9/ 10
நான் அதிகமாக பேசினால் கிரிஞ்ச் என்று சொல்கிறார்கள், பேசவில்லை என்றால் திமிராக இருப்பதாக சொல்கிறார்கள்.
10/ 10
நான் மூச்சு விட்டாலும் அவர்களுக்கு பிரச்சனை நான் மூச்சு விடவில்லையென்றாலும் அவர்களுக்கு, நான் என்னதான் செய்வது? நான் சினிமா விலக வேண்டுமா? இருக்க வேண்டுமா? என்று மனம் உடைந்து ராஷ்மிகா பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.