திருவருட்செல்வர் படத்தில் சிவாஜிக்கு மேக்கப் போட்டவர் ரங்கசாமி. இவரும் இவரது நண்பர் நன்னுவும் (இவர் மேக்கப் மேதை ஹரிபாபுவின் மகன்) இணைந்து பிளாஸ்டிக் மேக்கப் என்ற ஒன்றை கண்டுபிடித்திருந்தனர். வஜ்ஜிரம், ஃபிலிமை ஒட்ட பயன்படும் பொருள் இவற்றையெல்லாம் சேர்த்து இவர்களே கண்டுபிடித்ததுதான் இந்த பிளாஸ்டிக் மேக்கப்.
11. சுருக்கம் விழுந்த முகம், நரை விழுந்த தலை, தாடி, மேனியெங்கும் திருநீறு, அணிகலன்களாக ருத்திராட்சம். தோள் ஒடுங்கிய தேகம் என 39 வயது நடிகர் திலகம் இரண்டு மணி நேரத்தில் 80 வயது அப்பராக மாறிவிட்டார். "அம்மா சாப்பாடு எடுத்து வை" என்ற வசனத்தையே, நீளமா இருக்கு குறைக்க முடியுமா என்று கேட்கிற இந்தத் தலைமுறையில் நடிகர் திலகம் போல் ஒரு அர்ப்பணிப்பும், அசாத்திய திறமையும் கொண்ட நடிகர் உருவாக வாய்ப்பில்லை. மேக்கப் என்றதும் ஹாலிவுட் செல்லும் இளைய தலைமுறை, ஒருகாலத்தில் உள்ளூரிலேயே ஹாலிவுட்டை மிஞ்சும் மேக்கப்கள் போடப்பட்டன என்பதை நினைவு கொள்ள வேண்டும்.