ரங்கம்மா பாட்டிக்கு எம்.ஜி.ஆர் என்றால் உயிர். அவரின் படத்தை கையில் பச்சை குத்தும் அளவுக்கு அவருக்கு எம்.ஜி.ஆர் மீது தீராத பற்று. எம்.ஜி.ஆர் எப்போதும் உதவி கேட்டு வருபவர்களுக்கு இல்லையென்று ஒருபோதும் சொன்னதில்லை. அவரது இந்த குணம் தான் ரங்கம்மா பாட்டிக்கு அவரை பிடித்து போக காரணம். ரங்கம்மா பாட்டி, எம்.ஜி.ஆருடன் மட்டுமே ஏழு படங்களில் நடித்துள்ளார்.
அதனால் தனது அன்றாட தேவைகளுக்காக கர்சீப், சோப்பு, கீ செயின் உள்ளிட்டவற்றை விற்றுதான் தனது வாழ்க்கையை நடத்தி வந்தார். முன்பு மெரினா கடற்கரையில் விற்றுக் கொண்டிருந்த ரங்கம்மா பாட்டி அங்கு அனுமதி மறுக்கப்பட்டதால், வீட்டிலேயே பொருட்களை விற்று பிழைப்பு நடத்தினார். ஆனால் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கட்டிருந்தார்.
ரங்கம்மா பாட்டி குணச்சித்திர நடிகை மட்டுமல்ல, அவர் பழைய படங்களில் நடிகைகளுக்கு டூப் போட்டிருக்கிறார். ஒருவேளை நீங்கள் கவிஞர் கண்ணதாசனின் பிரபல பாடலான, பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது பாடலை அடுத்தமுறை கேட்கும்போது, நன்றாக பாருங்கள். அதில் ஜெயலலிதா பக்கத்தில், ரங்கம்மா பாட்டியும் இளமை ததும்ப உட்கார்ந்திருப்பார்.
தனக்கு திரையுலகை சேர்ந்தவர்கள் நடிக்க வாய்ப்பு கொடுத்தால், அதை வைத்து வயிற்றுப் பிழைப்பை பார்த்துக் கொள்வேன் என தன் வறுமையைப் பற்றி சில மாதங்களுக்கு முன்பு இணையதள நேர்க்காணலில் கூறியிருந்தார் ரங்கம்மா பாட்டி. உச்சத்தில் இருந்த நடிகர்கள் பின்னாட்களில் ஏழ்மையின் கோர பிடியில் சிக்கி தவிப்பதைப் போலவே, ரங்கம்மா பாட்டியும் அதில் மாட்டிக் கொண்டு, இன்று காலமாகியிருக்கிறார்.