

கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருமணம் முடித்த புதுமாப்பிள்ளை ராணா டகுபதியை நடிகர் விஷ்ணு விஷால் கிண்டலடித்துள்ளார்.


தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ராணா தனது காதலி மிஹீகா பஜாஜை கடந்த 8-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.


திருமணத்தில் கலந்து கொள்ள முடியாத காரணத்தால் திரையுலக பிரபலங்கள் பலரும் சமூகவலைதளத்தில் தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


புதுமாப்பிள்ளை ராணாவைக் கிண்டலடித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் விஷ்ணு விஷால். அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது, ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் பற்றி எல்லாம் நினைக்கவே மாட்டேன் என்று கூறியிருந்தார். ஆனால் இந்த போட்டோவில் இருப்பது, அந்த யாரோ ஒருவர் மாதிரி இருக்கிறதே. மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.


விஷ்ணு விஷாலின் ட்வீட்டுக்கு பதிலளித்த ராணா, “சில ஆண்டுகள் கழிந்து விட்டதே. நன்றி ப்ரதர்” என்று கூறியுள்ளார்.