ஓவர்நைட்டில் டிரெண்ட் ஆகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்ட பிரபலங்களில் ஒருவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் ரம்யா பாண்டியன் மிகவும் பரிச்சயம் ஆன முகம். மொட்டை மாடியில், குஷி ஜோதிகா பாணியில் ஒரு கவர்ச்சியான போட்டோ ஷூட் மூலம் ஒரே நாளில் பிரபலமானார் ரம்யாபாண்டியன். அமேசான் ப்ரைமில் வெளியான ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படத்தில் நடித்திருந்தார்.தமிழில் இடும்பன்காரி என்ற படத்தில் நடித்து வருகிறார்.