தங்கள் செல்லப்பிராணியுடனான படத்துடன் இந்த வருடத்தை அழகாக்கிய அனைவருக்கும் ராம்சரண் - உபாசனா தம்பதி தங்களின் நன்றியை தெரிவித்தனர். சில வருட காதலுக்குப் பிறகு ராம் சரண் மற்றும் உபாசனா இருவரும் ஜூன் 2012-ல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தை தொடர்ந்து, எப்போது குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள் என்ற கேள்வியை அடிக்கடி எதிர்கொண்டு வந்தார்கள். அதற்கு, பெற்றோர் ஆவதற்கு தாங்கள் எப்போது தயாராகிறோமோ அப்போது குழந்தை பெற்றுக் கொள்வோம் என பதிலளித்து வந்தனர். இதற்கு இந்த வருட இறுதியில் பதிலளித்து விட்டனர் ராம்சரண் - உபாசனா தம்பதி. தங்களின் முதல் குழந்தையை எதிர்பார்ப்பதாக சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தனர். இந்நிலையில் முதல் குழந்தை, RRR ஆஸ்கர் நாமினேஷன் என வெற்றிகரமாக இந்த வருடத்தை நிறைவு செய்துள்ளார் ராம் சரண்.